தமிழகத்தின் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றும் சமூக ஊடகங்களில் அட்டகாசம் செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்று ஏகத்துக்கும் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்.
ஜிஎஸ்டி குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது, ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது, பரிந்துரை மட்டுமே செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கை திவாலனதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. பிரதமர் மோடியை நடிகர் மாதவன் பாராட்டிய நிகழ்வுகளுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் சாட்டையை சுழற்றியுள்ளனர்.
இன்றைய அரசியல் மீம்ஸ்கள் இங்கே தொகுத்து தரப்படுகிறது:
ஜிஎஸ்டி குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது, ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது, பரிந்துரை மட்டுமே செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து, பாக்டீரியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “பயமா இருக்கா மேடம், இனிமேதான் பயங்கரமா இருக்கும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுவதாக மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
சரவணன் M என்ற ட்விட்டர் பயனர், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளனை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டு, “எங்கம்மா சத்தியமா நான் பிரபாகரன் கூட சேர்ந்து போட்டோ எடுத்தேன்யா… ” என்று சீமான் கூறுவதாக கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “பிரதமரை பாராட்டிய மாதவன், # மச்சான்…உடனே கிளம்பி.,..வா… ஒரு ஆளு சிக்கியிருக்கான்…!!!” என்று சந்தானம் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “பிரதமர் மோடி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி உலகிலேயே டிஜிட்டல் பொருளாதாரத்தை பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் கொண்டு வந்துள்ளார், இது தான் புதிய இந்தியா” என்று நடிகர் மாதவன் கூறியதைக் குறிப்பிட்டு, அடேங்கப்பா என்ன அழகா ஊதுறான்யா? என்று கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “இலங்கை திவாலானது ௭ன அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு என செய்தி வெளியாகியுள்ளது. நம்ம ஜீ.. கடன் கொடுத்துமா.. திவாலாயிருச்சு..?” என்று பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் தனது மற்றொரு ட்வீட்டில், இலங்கை திவாலானது ௭ன அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு என செய்தி. கவுண்டமணி வாய்ஸில், “௭ன்னது ௭னக்கு கொடுக்க வேண்டிய, வடக்குப்பட்டி ராமசாமி செத்துப்போய்ட்டானா.?” ரொம்ப கவலை பட வேண்டிய விஷயம்தான் என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“