கொச்சி : லட்சத்தீவில் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அரபிக் கடலின் இந்தியப் பகுதியில் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை இணைந்து தீவிரமாக கண்காணித்து வந்தன. நேற்று, இந்திய கடல் எல்லைக்குள், இரண்டு படகுகள் நுழைந்து லட்சத்தீவு அகட்டி கடற்கரை பகுதிக்கு வந்த போது, அதிகாரிகள் அவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு படகுகளில் இருந்தும் 1,526 கோடி ரூபாய் மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். படகுகளில் வந்த சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
கொச்சி : லட்சத்தீவில் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அரபிக் கடலின் இந்தியப் பகுதியில் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.