தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே யமகுச்சியும் மோதினர்.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அகானே யமகுச்சி 22 – 20 என வெற்றி பெற்றார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றி அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார். 
இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.