காவிரி கரையோர பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து காவிரி கரையோர பகுதியில் இருக்கும் மக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், காவிரியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.