சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வரும் 27ஆம் தேதிக்கு பதில் 23ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில், வரும் திங்கட்கிழமையே கேரளாவில் பருவ மழை தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதனிடையே, கேரள மாநிலத்தில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 7 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலப்புழா, களமசேரி உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டுள்ளனர்.