தங்கை நிக்கி திருமணத்தன்று குழந்தை பெற்ற அக்கா சஞ்சனா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் நேற்று அதிகாலையில் சென்னையில் தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி நேற்று தனது தங்கையின் திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் பெயில் பெற்று வெளியில் வந்தார். சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களின் பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சஞ்சனா. தனது அக்காவிற்கு குழந்தை பிறந்தது குறித்து எந்த ஒரு வாழ்த்தையும் பதிவிடவில்லை நிக்கி. தனது திருமணப் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டுள்ளார்.