ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.3006 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடுள்ளது

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 நிதியாண்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
image

சாலை வசதி,விவசாயம், சுய உதவி குழுக்களுக்கு மரக்கன்று என பல்வேறு திட்டங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு
 அத்திட்டத்தை செயல்படுத்த பிரிவு வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

விவசாயிகள், விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைச் சென்றடையவும், 2,750 கி.மீ நீளத்திற்கான ஓரடுக்குக் கப்பிச்சாலைகள், 800 கி.மீ நீளத்திற்கான சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் 800 கி.மீ நீளத்திற்கு பேவர்பினாக் (Paver Block) சாலைகள் ஆகியவை 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது

ஊரகப்பகுதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க 350 கி.மீ. நீளத்திற்கு வடிகால்வசதி, 25,500 சமுதாய உறிஞ்சு குழிகள் மற்றும் 1.75 இலட்சம் தனிநபர் உறிஞ்சுகுழிகள் ஒன்றிய மாநில
நிதிப்பங்களிப்புடன் 431 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது
Maalaimalar News: mahatma gandhi rural employment scheme extend 50 days

நீர் மற்றும் நில வளத்தை மேம்படுத்தி, மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, மண் அரிப்பைத் தடுத்து, மண்ணின் ஈரப்பதத்தைக் காத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், விவசாயத்திற்கான பாசன வசதியை மேம்படுத்திடவும் 10,000 தடுப்பணைகள், 5,000 பண்ணைக் குட்டைகள், தனி நபர் நிலங்களில் மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல் போன்ற பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய மாநில நிதிப் பங்களிப்புடன் 683 கோடியே 95 இலட்சம் ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது

ஊரகப் பகுதிகளை பசுமையாக்கவும் சூழலைப் பாதுகாக்கவும், ஊராட்சி மற்றும் அரசு நிலங்கள், அரசு நிறுவனங்கள். பள்ளிகள். கல்லூரிகள், பொதுப் பூங்காக்கள் மற்றும் ஊரகச் சாலைகளின் இருமருங்கிலும் 69 இலட்சம் மரக்கன்றுகள் 293 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்படும். மழை மற்றும் வெள்ளக் காலங்களில் வாரிகள் மற்றும் வாய்க்கால்களின் வரப்பினைப் பாதுகாக்கவும், ஊரகப் பகுதிகளில் பனைப் பொருட்கள் சார்ந்த வேலை வாய்ப்பினை பெருக்கவும், 25 இலட்சம் பனை விதைகள் 87 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விதைக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு: இறந்தவர்கள்  பெயரில் சம்பளம் | மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் ...

ஊரகப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சிறு/குறு மற்றும் பட்டியலின்/பழங்குடியின விவசாயிகளின் நிலத்தின் ஒரு பகுதியில் நாவல், மாதுளை, மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 விவசாயிகள் என்ற வீதத்தில் நிலமேம்பாட்டுப் பணிகளோடு இணைந்து, மரக்கன்றுகள் நடும் பணி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 8.45 இலட்சம் பழ மரக்கன்றுகள், 11 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் புதிதாக 388 வட்டார அளவிலான நாற்றங்கால்கள் மற்றும் 1,500 தோட்டக்கலை நாற்றங்கால்கள் ஒன்றிய மாநில நிதிப் பங்களிப்புடன் 92 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது
புதுயுகம்: சமூக தணிக்கை சங்கம் SASTA

இரும்புச் சத்துக் குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 3,500 புதிய முருங்கை நாற்றங்கால்களில் 21 இலட்சம் முருங்கை நாற்றுகள் வளர்க்கப்பட்டு, 10.50 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா இரண்டு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது

ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் விதமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பயன் பெறும் வகையில் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து 500 குழந்தை நேய அங்கன்வாடி மையங்கள் 59 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இக்கட்டடங்கள் கட்டுவதில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் குக்கிராமங்கள் / கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட எதுவாகவும் திட்டப் பணிகளுக்காகவும் மொத்தமாக 3 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.