நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி நினைவுநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்குள்ள குழந்தைகள் நல மையத்தில் சிறப்பு ஊட்டச்சத்து முகாமினை துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஊட்டி – 200 நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், 118 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.