வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரும்பாலான மழையானது மேற்கு தொடர்ச்சி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :