கிரிப்டோகரன்சி குறித்து அதன் விலையும், வர்த்தக அளவீடும், அரசு அறிவிப்புகள் அடிப்படையில் சந்தையில் கருத்துக்கள் தொடர்ந்து மாறி வருகிறது. இதைத் தாண்டி கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து முதலீட்டு அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
அந்த வகையில் கிரிப்டோ முதலீடு குறித்துப் பெரும் பணக்காரர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி விலை உயரும் போதும், இறங்கும் போதும் கருத்துக்கள் அனல் பறக்கிறது.
இந்த வகையில் பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா?
எலான் மஸ்க் முதல் ஜாக் டோர்சி வரை
டெஸ்லா எலான் மஸ்க், மைக்ரோ ஸ்டேடர்ஜி மைக்கெல் ஸ்லேயர், டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி உட்படப் பலர் கிரிப்டோகரன்சியைப் பெரிய அளவில் ஆதரிப்பது மட்டும் அல்லாமல் அதிகளவில் முதலீடும் செய்து வருகின்றனர். இதற்கு நேர் எதிராக நிற்கிறார் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ்
ரெட்டிட் தளத்தில் ‘Ask Me Anything’ பிரிவில் பில் கேட்ஸ்-யிடம் ஏன் ஒரு கிரிப்டோகரன்சியில் கூட முதலீடு செய்யவில்லை எனக் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த பில் கேட்ஸ் கிரிப்டோ முதலீட்டில் எந்த மதிப்பும் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை.
கிரிப்டோகரன்சி
அதனாலேயே நான் எந்தக் கிரிப்டோகரன்சியிலும் முதலீடு செய்யவில்லை, மதிப்புத்தக்க அவுட்புட் கொண்டவற்றில் மட்டுமே நான் முதலீடு செய்ய விரும்புவேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
விலை நிர்ணயம்
மேலும் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு என்பது யாரோ ஒருவர் அதற்குக் கொடுக்கும் பணத்தில் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே இதை மற்ற முதலீடுகளைப் போல் இல்லை என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
பங்கு மதிப்பு
உதாரணமாகப் பங்குகள் என்றால் ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, வருமானம், வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பிட்காயின் சந்தையில் இருக்கும் டிமாண்ட் அடிப்படையில் செயல்படுகிறது.
Bill Gates answers Why He Doesn’t Own Any Cryptocurrency on reddit question
Bill Gates answers Why He Doesn’t Own Any Cryptocurrency on reddit question பில் கேட்ஸ் கிரிப்டோ-வில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லையாம்.. ஏன் தெரியுமா..?