இத்தாலியில் மூன்று முறை பிரதமராக செயல்பட்ட சில்வியோ பெர்லுஸ்கோனி தமது தனிப்பட்ட குடியிருப்பில் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியது நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஊடக அதிபரும் மூன்று முறை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டவருமான 85 வயது சில்வியோ பெர்லுஸ்கோனி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயருக்கும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
பிரதமர் பொறுப்பில் இருக்கும் போது இவரது தனிப்பட்ட இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட விருந்துகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் இருக்க, குறித்த விருந்துகளில் பங்கேற்ற பெண்களுக்கு இவர் லஞ்சம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சில்வியோ பெர்லுஸ்கோனி நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
விருந்தில் பங்கேற்ற பெண்களுக்கு லஞ்சம் அளித்த காரணத்தால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.
சில்வியோ பெர்லுஸ்கோனி மற்றும் அவரது நெருங்கிய தொழிலதிபர்கள் முன்னெடுக்கும் தனிப்பட்ட இரகசிய விருந்துகள் அனைத்தும் பெண்கள் தொடர்பானது எனவும் ஆபாச நடனம் உட்பட அனைத்தும் முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த விசாரணையின் பல கட்டத்தில் சில்வியோ பெர்லுஸ்கோனியின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மட்டுமின்றி, முக்கிய சாட்சி ஒருவர் திடீரென்று மரணமடைந்ததும் இந்த வழக்கின் விசாரணையை பாதித்தது.
மொராக்கோ belly dancer ஆன Karima El-Mahroug என்பவருடன் நெருக்கமாக இருக்க பணம் தந்த விவகாரத்தில் சில்வியோ பெர்லுஸ்கோனி குற்றவாளி என 2013ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்தபோது குறித்த நடனக்கலைஞருக்கு 17 வயதே என்பதால், இத்தாலிய சட்டத்தின்படி பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், உண்மையான வயது தெரியாது என வாதிட்ட அவரது சட்டத்தரணிகள் வழக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர்.
மட்டுமின்றி முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மொராக்கோ மொடல் Imane Fadil என்பவர் 2019ல் தமது 33வது வயதில் திடீரென்று மரணமடைந்தார்.
பெர்லுஸ்கோனிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டு வந்தாலும், இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதியில் வெளிவரும் என்றே கூறப்படுகிறது.