நடிகர் பரத்தின் 50-வது படமாக உருவாகி வரும் ‘லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதை அடுத்து படக்குழு கேக்வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் பரத். அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘செல்லமே’, ‘காதல்’, ‘வெயில்’, ‘எம்டன் மகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனிமுத்திரை பதித்து வந்தார். தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை நடிகர் பரத் கவர்ந்து வந்தநிலையில், சமீபகாலமாக இவரது படங்கள் வரவேற்பை பெற தவறி வருகின்றன.
இதனால் வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடிகர் பரத்தின், 50-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. கடந்த மார்ச் மாதம் பூஜை போடப்பட்டு படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. த்ரில்லர் கலந்த குடும்ப கதை அம்சம் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில், பரத்தின் மனைவியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.பி.பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
‘லூசிபர்’, ‘புலி முருகன்’, ‘குரூப்’, ‘சல்யூட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியிற்றிய ஆர்.பி.பாலா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதை கேக் வெட்டி படக்குழுவினர் இன்று கொண்டாடினார். இந்த நிகழ்வில் பரத், வாணிபோஜன், இயக்குனர் ஆர்.பி. பாலா உள்ளிட்டோர் இருந்தனர். படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து உடனடியாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளது. ஜூலை மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#LOVE ❤️ movie shooting has been WRAPPED successfully, team has celebrated the occasion with @bharathhere @vanibhojanoffl and director @rpbala2012#Bharath50 @RPFilmsOfficial @MuthaiahG @actorvivekpra @Danielanniepope #RonnieRaphael @iamswayamsiddha @teamaimpr @decoffl pic.twitter.com/cA6nY0bTze
— R.P.Bala RP FLIMS (@rpbala2012) May 20, 2022