தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 20-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘மொழியின் பெயரில் சர்ச்சையை கிளப்புகிறார்கள் – பிரதமர் மோடி… சர்ச்சையை கிளப்புவது யார்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Rainbow Times
பிள்ளையைக் கிள்ளுவதிலும், பின் தொட்டிலை ஆட்டுவதிலும் பாஜகவினர் வல்லவர்கள்!இன்று ஒரே மதம் என்ற அடிப்படையை, மனதில் ஏற்றுவதை பாஜக முன்னின்று வழிநடத்துகிறது! மசூதிகளுக்குள் குழிதோண்டி கடவுளை படைக்கின்ற கோமாளித்தத்தை வேறு யார் செய்வார்கள்? ஜனங்களின் தேவை பொருளாதார வளர்ச்சியா?மத மோதலா?
NEDUNCHERALATHAN
இருமொழி கொள்கையில் மூன்றாவது மொழியை திணிப்பது யார்? கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? ஒன்றிய அரசே!
சைலஸ் சி
மொழி அரசியலை தூண்டி தேர்தலில் வெற்றி பெற துடிக்கும் திமுக
Advice Avvaiyar
மொழியின் பெயரில் பிரச்சினைகள் வரவேண்டிய என்பதற்காகவே ,சர்ச்சைப் பேச்சுக்களைத் துவக்கி வைத்து விட்டு,எதிர்ப்புகள் வந்த பின் பதவியைத் தூக்கி யார் மேல் போடுறீங்க?மக்கள் மீதா?ஒவ்வொரு பிரச்சினையாக்கி கொண்டு வந்து எதை மறைத்து, மறக்க வைக்கப் பார்க்கிறீர்கள்?அவரவர் வேலையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும், ஒரு பிரச்சினை, குழப்பத்தில் பொழுது விடிகிறது.மொழி போய்,கோவில்கள்,தாஜ்மகால் எனப் புதிதாக சர்ச்சை…இதனால் என்ன பலன்?அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள தீர்க்க முடியாம தவிக்கும் மக்கள் கஷ்டத்தைப் பாருங்க..தீர்த்து வைங்க.அதை விட்டுட்டு
மோகன்இரஞ்சித்
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருளாக உள்ளது என்றதாம்… அது போல பிரதமரின் கருத்து உள்ளது. ஒன்றிய அரசு இந்தி,இந்து, இந்தியா என்ற தனது கொள்கை அடிப்படையில், இந்தியை திணிப்பதால் தான், மொழி குறித்தான பேச்சுக்கள், விவாதங்கள் நடைபெறுகிறது.
nandhakumar
வட இந்தியர்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிந்தும் மறைக்கின்றனர். இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள். சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் நாகரீகம். பின்னால் வந்த இந்த மண்ணிற்கு தொடர்பில்லாத வர்கள், தமிழர்களின் தொன்மையை மறைக்க முயல்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM