குஜராத்தில் மூன்று சரக்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா – தன்சுரா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். படுகாயம் அடைந்த மேலும் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.