இந்த இடத்திற்கு சென்றால் உயிர் இருக்காது! மீறி சென்ற மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்… திகில் கிளப்பும் புகைப்படங்கள்


உலகின் கொடிய விஷப்பாம்புகள் வசிக்கும் பிரேசிலின் பாம்பு தீவு குறித்த பல திகில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் சாவோ பாலோ கடற்கரையிலிருந்து 90 மைல் தொலைவில் அமைந்துள்ளது பாம்பு தீவு எனப்படும் Ilha da Queimada Grande.

பிரேசிலிய இயற்கை அழகை கொண்ட பல இடங்களைப் போல Ilha da Queimada Grande நீங்கள் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்காது.
ஆம் இங்கு மனிதர்களே போக முடியாது!

ஏனெனில் இந்த தீவில் உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பான golden lancehead vipers மட்டுமே 4000க்கும் அதிகமானவை உள்ளன.
அதே போல எங்கு பார்த்தாலும் பாம்புகளாகவே காணப்படும்.

இந்த இடத்திற்கு சென்றால் உயிர் இருக்காது! மீறி சென்ற மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... திகில் கிளப்பும் புகைப்படங்கள்

@NaturelsWeird/Twitter

நிலப்பரப்பில் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் கொடிய பாம்புகள் இருக்கும்.
மேலும் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு விஷப் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் வர தொடங்கியது.
தற்போது தீவின் ஒவ்வொரு அங்குலத்தையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளன.

இந்த இடத்திற்கு சென்றால் உயிர் இருக்காது! மீறி சென்ற மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... திகில் கிளப்பும் புகைப்படங்கள்

Alamy Stock Photo

ஒருமுறை ஒரு மீனவர் வாழைப்பழங்களைத் தேடி தீவில் இறங்கியதாக வதந்தி பரவுகிறது. அடுத்த சில நாட்களில் அவரது படகில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார், அவரது உடல் முழுவதும் பாம்பு கடி இருந்துள்ளது.

இங்குள்ள பாம்புகள் கடிப்பதால் நேரடியான உயிரிழப்பு மட்டுமின்றி சிறுநீரக செயலிழப்பு, மூளை ரத்தக்கசிவு மற்றும் குடல் இரத்தப்போக்கும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த இடத்திற்கு சென்றால் உயிர் இருக்காது! மீறி சென்ற மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... திகில் கிளப்பும் புகைப்படங்கள்

Nayeryouakim/Wikipedia

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.