150 கிமீ வேகம்! உங்களால் முடியாதது எதுவும் உண்டா அஸ்வின்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், தமிழக அணி வீரர் அஸ்வினை புகழ்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

நடப்பு சீசனில் அவர் பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை அவர் விளாசினார்.

அதே போல் நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியபோது அஸ்வின் பேட்டிங்கில் மிரட்டினார்.

150 கிமீ வேகம்! உங்களால் முடியாதது எதுவும் உண்டா அஸ்வின்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வி

Photo: Sportzpics for IPL

அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசி களத்தில் இருந்தார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

150 கிமீ வேகம்! உங்களால் முடியாதது எதுவும் உண்டா அஸ்வின்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வி

Photo: PTI

இந்த நிலையில் அஸ்வினை புகழ்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது டிவீட்டில், ‘அன்புள்ள அஸ்வின், கிரிக்கெட்டில் உங்களால் செய்ய முடியாதது எதுவும் உண்டா? சுழற்பந்து வீச்சில் மாஸ்டராக உள்ளீர்கள், பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம், 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீச தொடங்கும் நேரம் இது. நீங்கள் ஒரு சாம்பியன் ஆல்-ரவுண்டர்’ என புகழ்ந்துள்ளார்.  

150 கிமீ வேகம்! உங்களால் முடியாதது எதுவும் உண்டா அஸ்வின்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வி

Photo:  Twitter

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.