என்னிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டனர் : லாலு மனைவி புகார்

பாட்னா

ம்மிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார்

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் பிரதமருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த கால கட்டத்தில் ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லாலுவும், அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றுள்ளதாக சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

நேற்று இது தொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உட்பட 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  சிபிஐ நேற்று டில்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னா, கோபால்கஞ்ச் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதில் ஒரு பகுதியாக பாட்னா சர்குலர் சாலை பண்ணை வீட்டில் வசிக்கும் லாலுவின் மனைவி ரப்ரி தேவியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ரப்ரி தேவி இது குறித்து, ‘என்னிடம் ​​​​சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டனர். மேலும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர்’ என குற்றம் சாட்டி உள்ளார். இதை சிபிஐ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள், ‘லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் லாலு, அவரது மனைவி ரப்ரி, அவர்களது இரண்டு மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா ஆகியோர் அடங்குவர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரப்ரி தேவியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினோம்.  அவர் கூறியது தவறான தகவல்’ என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.