பிரிட்டன் அமைச்சகத்தில் சில வாரங்களுக்கு முன்பு முக்கிய விவாதமாக இருந்தது அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி-யின் அதிகப்படியான சொத்து மதிப்பும், இன்போசிஸ் நிறுவனத்தின் ரஷ்ய வர்த்தகமும் தான்.
இன்போசிஸ் ரஷ்யாவை வீட்டு மொத்தமாக வெளியேறிய நிலையிலும், அக்ஷதா மூர்த்திப் பிரிட்டன் நாட்டில் தனது சொத்து மதிப்பிற்கு வரி செலுத்துவதாகவும் அறிவித்த பின்பு பிரச்சனை முடிந்தது
இந்நிலையில் தற்போது பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அந்நாட்டு டாப் பணக்காரர்கள் பட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
பின்லாந்து-க்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா.. என்ன காரணம்..?
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் சன்டே டைம்ஸ் சுமார் 250 பேர் கொண்ட பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இடம்பெற்றுள்ளனர்.
ரிஷி சுனக் – அக்ஷதா மூர்த்தி
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி-யின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் (911.19 மில்லியன் டாலர்) எனச் சன்டே டைம்ஸ்-ன் 2022ஆம் ஆண்டுப் பணக்காரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
222வது இடம்
இதன் மூலம் 250 பேர் கொண்ட தி சண்டே டைம்ஸ் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஜோடி 222வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி அக்ஷதா மூர்த்தி-ஐ சார்ந்தும், இன்போசிஸ் நிறுவன பங்குகளையும் சார்ந்துள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் இணை நிறுவனர்களின் முக்கியமானவரான நாராயண மூர்த்தி-யின் மகள் தான் அக்ஷதா மூர்த்தி. தனது தந்தை வாயிலாகக் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை இன்போசிஸ் பங்குகளை அக்ஷதா மூர்த்தி வைத்துள்ளார்.
பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத்
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி-யின் 730 மில்லியன் பவுண்டுகள் (911.19 மில்லியன் டாலர்) சொத்து மதிப்பு மதிப்பு என்பது பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத்-ஐ விடவும் அதிகச் சொத்து மதிப்பாகும்.
பிரிட்டன் பொருளாதாரம்
பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் என அனைத்தும் மோசமான நிலையை அடைந்துள்ள வேளையில் பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக்-ன் அடுத்த சில மாதம் மிகவும் மோசமான நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இந்த விலையில் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் 222வது இடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
Akshata Murthy got 222 place in uk rich list 2022; richer than Queen Elizabeth II.
Akshata Murthy got 222 place in uk rich list 2022; richer than Queen Elizabeth II அடேங்கப்பா..! பிரிட்டன் ராணியை விட அதிகச் சொத்து மதிப்பு.. அசத்தும் இன்போசிஸ் நாராணயமூர்த்தி மகள்..!