Tamil Serial Bharathi Kannamma Rating Update : எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது கண்ணம்மா எப்படி இந்த நாடகத்தை பொறுமையாக பார்க்கிறோம் என்று என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவி எப்படி இருக்க கூடாது என்பதற்கு பெஸ்ட் உதாரணம்தான் இந்த சீரியல். தோழியின் பேச்சை கேட்டு மனைவியை சந்தேகப்படுவதும், கணவன் சந்தேகப்படுகிறான் என்று தெரிந்தும் அவனுக்கு உன்மையை புரிய வைக்காமல் அழுக்காட்சியாக இருப்பதும், அனைவரும் சொல்கிறார்களே இதில் எதாவது உண்மை இருக்குமா என்று யோசிக்காமல் தோழியை மட்டும் அவ்வப்போது மன்னித்து ஏற்றுக்கொள்வதும் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அம்சங்கள்.
நீங்கள் உண்மை சொல்லுங்க இல்லா சொல்லாம போங்க எங்களுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் போட்டே ஆகனும்னு சொல்லி இதற்கு பரம ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. ஏன்னா இதை விட பெரிய பொழுதுபோக்கு வெறு என்ன இருக்க முடியும். ஆனால் அந்த சீரியல் ஆடியன்ஸ் மட்டும் கவனிக்காமல் மறறவர்களையும் கவனித்தால் நன்றாக இருக்கும் இயக்குநர் அவர்களே. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் இதை மட்டும் எடுத்தவிட்டால் சீரியலே முடிந்துவிடும்.
ஆனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்று சொல்லும் இயக்குநர் சென்னையில் ஒருநாள் படதையே சீரியலாக எடுத்து ஒரு வாரம் ஓட்டிவிட்டார். ஏன் சார் இதற்கு எல்லாம் வெண்பா தான் காரணம் னு பாரதிக்கு தெரிஞ்சா அதுக்கு அப்புறம் சீரியலை எப்படி எடுத்து போகனும்னு உங்களுக்கு ஐடியாவே இல்லையா அதனாலதான் இப்படி ஜவ்வு மாதிரி இழு்துக்கிட்டு இருக்கீங்களா?
இப்படி கேள்விகளாக அடுக்கிக்கொண்டே போகும் இயக்குநர் தனக்கு தெரிந்ததை தான் செய்யார். அதை விடுங்க இப்போ பாரதிகண்ணம்மா ப்ரமோ வெளியாகிவிட்டது. இதில் பாரதி தான் அப்பா என்பதை லட்சுமி தெரிந்துகொண்டாள் என்று கண்ணம்மாவுக்கு தெரிந்துவிட்டது. இது கண்ணம்மாவுக்கு ட்விஸ்ட். பாரதி கண்ம்மாவை டைவர்ஸ் பண்ண போகிறார் என்பதும் லட்சுமிக்கு தெரியும். இது நமக்கு கொடுத்த ட்விஸ்ட்.
இதை எல்லாம் இப்போ தெரிந்துகொண்ட கண்ணம்மா இவ்ளோவும் தெரிந்துகொண்டு எல்லாத்தையும் மனசுல போட்டு பூட்டி வச்சிக்கிட்டு அமைதியா இருந்திருக்க இவ்ளோ மனப்பக்குவம் உனக்கு எப்படி இருக்குனு நெனச்சாலே ஆச்சரியாமா இருக்கு என்று சொல்கிறாள் கண்ணம்மா. ஆனால் கடுப்பில் உள்ள ரசிகர்கள் இது என்ன ப்ரமாதம் இதை விட ஸ்பெஷன் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பது போல் இந்த சீரியல் பாப்பாங்கன்னு நினைக்கிற உங்க மன பக்குவத்த நினைக்கிரப்ப எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“