பார்லிமென்ட் தேர்தல்; ஆஸி.,க்கு புதிய பிரதமர்| Dinamalar

கேன்பெரா : ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.ஆஸ்திரேலிய பார்லி.,யில் மொத்தம் உள்ள 151 இடங்களுக்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.

ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று மாலையிலேயே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை கைப்பற்றியது. ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி ஆல்பேன்ஸ்,ஆஸி., பிரதமராக விரைவில் பொறுப்பேற்கிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.