புனே : புனேவில் உள்ள லால் மகால் அரண்மனையில் அத்துமீறி நடனம் ஆடி, அதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகை உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புனே நகரில் மராத்திய மன்னர் சிவாஜி இளமைக் காலத்தில் தங்கியிருந்த லால் மகால் அரண்மனை உள்ளது.
இங்கு, வைஷ்ணவி பாட்டீல் என்ற ‘டிவி’ நடிகை, ‘லாவணி’ எனப்படும் மராத்திய கிராமப்புற நடனமாடி, அதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதற்கு தேசியவாத காங்., உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ‘சத்ரபதி சிவாஜியின் லால் மகால் அரண்மனையில் நடனம் ஆடி, அதன் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய வைஷ்ணவி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இதற்கிடையே, தான் தடுத்தும் வைஷ்ணவி நடனம் ஆடி, படம் பிடித்ததாக லால் மகால் காவலாளி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வைஷ்ணவி மற்றும் அவர் நடனத்தை படம் பிடித்த மூவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில், வைஷ்ணவி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
Advertisement