ராமநாதபுரம் அருகே மகளின் மாமியாரை வெட்டிக் கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து. சிறையில் அடைத்துள்ளனர்.
மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில், மகளின் மாமியாரை வெட்டிப் படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவியா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் திருமணம் காரணமாக இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று ஆத்திரத்தில் இருந்த காவியாவின் தந்தை கண்ணாயிரம், தனது மகளின் மாமியாராக ராக்கு-வை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அபிராமம் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த கண்ணாயிரத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.