பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 33 பலியாகினர். பீகாரில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, இங்குள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 33 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளனர். அதிகபட்சமாக பாகல்பூரில் 7 பேரும், முசாபர்பூரில் 6 பேரும் இறந்துள்ளனர். ஆண்டு பலி2017 2,8852018 2,3572019 2,876இந்தியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில், 2001ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் 42 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31, 2021 தேதி வரையில் 1,619 பேர் இறந்துள்ளனர். இதில், அதிகப்பட்சமாக பீகாரில் 401, உபி.யில் 238, மத்திய பிரதேசத்தில் 228, ஒடிசாவில் 156, ஜார்க்கண்ட்டில் 132 பேர் பலியாகினர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653193531_Tamil_News_5_22_2022_49723453.jpg)