இன்று தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம்

யிலாடுதுறை

ன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

sample pic

ஆண்டு தோறும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் குருபூஜை விழா நடைபெறும்.  இவ்விழாவின் 11 ஆம் நாள் அன்று பட்டினப் பிரவேசம் நடைபெறும்.  தமிழக அரசு இந்த பட்டின பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதித்து இருந்தது.   முதல்வர் மு.க.ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள், மடாதிபதிகள் சந்தித்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வலியுறுத்தினர்.

இதனடிப்படையில் தமிழக அரசு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த தடையை  நீங்கியது.   கடந்த 12 ஆம்  தேதி இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 10 ஆம் நாள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது.  அப்போது ஏற்கனவே ஆதீனங்களாக இருந்து மறைந்தவர்களைத் தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் ஆதீனம், நாற்காலி பல்லக்கில் அமர்ந்து  நினைவிடங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது மரபு ஆகும்.

நேற்று தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதற்காக மடம் மின் விளக்குகளால் வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் காவலர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரம் ஆதீனம் இது குறித்து,

“இந்த பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி என்பதால் இதில் அரசியல் கலக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.