நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார்.
15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு கையளிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதிபதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஸ் பத்திரனவிற்கு வழங்க ஜனாதிபதி முன்வந்தார். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவியேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமர் தொடர்ந்தும் நிதிவிவகாரங்களை பொறுப்பேற்றுள்ளார். வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அதிசிறப்பு அமைச்சொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.