பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை
மத்திய அரசு
குறைத்துள்ளதை அடுத்து
பெட்ரோல்
லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்களுக்கு .200 ரூபாய் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிப்பொருள் மீதான வரி குறைப்பால் அவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம்
விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்திவிட்டு தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 9.50 ரூபாய், டீசல் 7 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது கொள்ளை அடிப்பதற்கு சமமானது.
மத்திய அரசு ஒரு ரூபாய் கலால் வரியை குறைத்தால் அதில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது. மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு 59 பைசாவையும், மாநில அரசு 41 பைசாவையும் குறைப்பதாகவே அர்த்தம். இதன் மூலம் மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சர் வழங்கியுள்ள உபதேசம் அர்த்தமற்றதாகி விடுகிறது.
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாத, பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை மத்திய அரசு குறைப்பதே உண்மையான விலை குறைப்பாகும்’ என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.