தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.
மேலும், குரூப் 2, 2ஏவில் தவறான கேள்விள் இடம் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்த டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது.
தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வௌியிடப்படும்.
விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு- ஏஐசிடிஇ