தந்தையை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு காஞ்சனமாலா, யமுனா பரிமளா , குணசேகரன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் , குமரேசனின் மூத்த மகள் கணவன் இறந்து விட்டதால் தந்தையுடன் வசித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்ககுக்கு முன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப தந்தை வீடு வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் தந்தையும் சகோதரனும் வராததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்த கரை படிருந்திருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குணசேகரன் ஒரு ஆட்டோவில் டிரம்மை ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
குமரேசன் அவரது மகன் குணசேகரன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ரமணி போட்டுள்ளார் மேலும் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்கு உப்புக்கண்டம் என்று கேட்டுள்ளார் பின்னர் தம்முடன் ராணிப்பேட்டையை அடுத்த காவேரிபாக்கம் சென்றுள்ளார். அங்கு நடத்திய விசாரணையில் அவர் அங்குள்ள விவசாய நிலத்தில் அந்த டிரம்மை புதைத்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, வட்டாசியர் முன்னிலையில் பள்ளத்தை தோண்டி டிரம்மில் இருந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைககாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில் குமரேசனிடம் மகன் குணசேகரன் சொத்தைஎழுதி வைக்க கூறியுள்ளார். ஆனால் , அதற்கு அவர் மறுக்கவே அவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடி வருகின்றனர்.