கெஸ்பாவ எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பொல்கஸ்-ஓவிட்ட எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் சில தினங்களுக்கு முன்னர் கெஸ்பாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டதினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வீதித் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படுமென்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.