கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தனியார் சொகுசு பேருந்தும், டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவல்லாவில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, பாலக்காடு அடுத்த முடப்பலூரில் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே எதிர்திசையில் வந்த டிராவலர் வேன் மீது வேகமாக மோதியது.
இதில், வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயமடைந்தனர். போலீசாரின் விசாரணையில், மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சொகுசு பேருந்து, வேன் மீது மோதியது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.