விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் பகுதியின் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் கடந்த 19ஆம் தேதி விராணம் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த 4 மர்ம நபர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த ஒன்றரை பவுன் செயின் மற்றும் இரண்டாயிரம் பணத்தை பறித்து உள்ளனர்.
மேலும் அவர்களை அடித்து அங்குள்ள பாழடைந்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் தினேஷ் முரளி , வல்லரசு ஆகியோர் அந்த பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நவீன்குமார் தினேஷ் முரளி ஆகிய மூவரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசுவை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.