Tamil Serial Rating Update : என்னப்பா இந்த சீரியல்ல உண்மை தெரிஞ்ச யாரே உண்மை தெரியவேண்டியவங்களுக்கு சொல்லவே மாட்ரீங்க மகா சங்கமத்துக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கு்டும்பத்துக்கே உண்மை தெரிஞ்சுபோச்சு ஆனா பாக்யாவுக்கு இன்னும் தெரியல நல்ல மெயின்டைன் பண்றீங்க சார்..
விஜய் டிவியின் முக்கிய சீரியலகளில் ஒன்று பாக்யலட்சுமி. மனைவியும் முன்னாள் காதலியும் நெருங்கிய தோழியாக இருந்தாலும். அவர்கள் இருவருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு மீறிய உறவை எப்படி வைத்துக்கொள்வது என்பதை இந்த சீரியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஒரு பொண்ணு கணவனே கண்கண்ட தெய்வம் என்று இருக்கலாம் அதுக்காக இப்படியா என்று கேட்க தோன்றும் சீரியல்தான் இது.
இது போதாதுனு இப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மகா சங்கமம் வேறு. இதுல கொஸ்டா வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கூட உண்மை தெரிஞ்சுபோச்சு கோபி ராதிகா கூடத்தான் பழகுறார்னு ஆனா எழிலுக்கும் அவனது தாத்தாவுக்கும் உண்மை தெரிஞ்சும் இதை பாக்யாவிடம் சொல்லவில்லை. அவங்கதான் அப்படீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி தனம் இருவருமே இப்படித்தான் இருக்காங்க.
ஏனுங்க மூர்த்தி கோபி கெட்டவர்னு சொல்றீங்களே அவர்தான் பாக்யாவின் புருஷனு சொல்லிருக்கலாமே ஏன் சொல்லலா டைரக்டர் சொன்னாரா சொல்லக்கூடாதுனு… சரி அத விடுங்க பாக்யாகிட்டயாவது உண்மையை சொல்லிருக்கலாமே தனம் மேடம் அண்ணிய நினைத்து ஃபீல் பண்றீங்க ஆனா உண்மை என்னானு சொல்லவே இல்லை. இவங்க எல்லாம் மேலோட்டமா சொல்லிட்டு போய்ட்டாங்க ஆனா இதுல இருந்து தப்பிக்க தலைவன் கோபி எப்படியும் ப்ளான் வச்சிருப்பார் பாருங்க.
இந்த இரு சீரியல்களுமே ஜவ்வுமாதிரி இழுத்துக்கொண்டிருப்பதால்தான் டிஆர்பியில் பாக்யலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டுமே பெருத்த அடி வாங்கியுள்ளது. ஆனாலும் சீரியல் இயக்குநர்கள் விறுவிறுப்பையே அல்லது பரபரப்பையே ஏற்படுத்த தவறி வருகின்றனர். விஜய் டிவி சீரியல்கள் தற்போது டிஆர்பியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனாலும் பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் ப்ரமோ மட்டும் வெளியாகி வருகிறது.
அடுத்த வாரம் மகா சங்கமம் முடிவடைய வாய்ப்புள்ளது. அதன்பிறகுதான் கோபியின் ஆட்டம் தொடரும். வழக்கம்போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டார் ஊருக்கு சென்றவுடன் அவர்களது வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். ஆனால் இன்றைய ப்ரமோ வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கதான் செய்கிறது.