எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது.
இதனையடுத்து ,நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கும் நாளை 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளன.
நிறுவனத்திடம் தற்போது 6 தினங்களுக்குப் போதுமான எரிவாயுவே உண்டு.
இன்று முதல் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இவற்றில் 30 ஆயிரம் கொழும்பு – கம்பஹாவிற்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.