புயல், மழை… இருளில் மூழ்கிய கனடா!

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் அளவுக்கு என்னதான் விஞ்ஞானம் வளர்த்திருந்தாலும், இவற்றின் பாதிப்பை மனிதனால் இன்னமும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

என்னதான் இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயிப்பேன் என்று இயற்கை அவ்வபோது உணர்த்தி உள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள புயல், மழை இன்னொரு முறை இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. அத்துடன் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.

நாடாளுமன்ற தேர்தல்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி!

இதன் விளைவாக அங்கு பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட புகுதிகளில் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. புயல், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் ணிகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.