உணவில் இருந்து உப்பு மற்றும் சர்க்கரையை நீக்க வேண்டுமா?

உணவில் அதிக அளவு உப்பும் அதிக சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், உங்கள் உணவில் தேவையான அளவு உப்பும் சர்க்கரையும் சேர்ப்பது சரியே என்று குருகிராமில் உள்ள கிளவுட்நைன் குழுமம் மருத்துவமனைகளின் மூத்த நிர்வாக ஊட்டச்சத்து நிபுணர் ஷிவானி பைஜால் கூறுகிறார்.

உடலின் சீரான அளவில் உப்பு மற்றும் சர்க்கரையும் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு ஒரு கனிமப் பொருள். இது திரவ அளவு மற்றும் அமில-அடிப்படை சமநிலையை பராமரிக்கவும், நரம்பு தூண்டுதல்களை செய்யவும் தசை சுருக்கங்களை ஒழுங்குபடுத்தவும் தேவைப்படுகிறது.

சர்க்கரை ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும். இது நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு நல்ல சக்தியை வழங்கும் ஆதாரமாக உள்ளது.

இருப்பினும், உணவில் அதிக உப்பு மற்றும் அதிக சர்க்கரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்பது மறுக்க முடியாது. ஆனால், உங்கள் உணவில் தேவையான அளவை உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பது சரியே என்று குருகிராமில் உள்ள கிளவுட்நைன் குழுமம் மருத்துவமனைகளின் மூத்த நிர்வாக ஊட்டச்சத்து நிபுணர் ஷிவானி பைஜால் கூறுகிறார்.

“மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைப் பற்றி அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. ஏனெனில், அவர்கள் வழக்கமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உணவு பொருட்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆரோக்கியமாக உள்ளபெரியவர்களுக்கு உணவில் சேர்த்துகொள்ள வேண்டிய உப்பு ஒரு நாளைக்கு 5 கிராம் அதாவது ஒரு டீஸ்பூன் என்று பரிந்துரைக்கிறது. 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்களை விட குறைவாக அளிக்க வேண்டும். மேலும், உப்பு, சர்க்கரை கொடுக்க வேண்டிய அளவு என்பது அவர்களின் ஆற்றல் தேவைகளைப் பொறுத்து கொடுக்க வேண்டும்.

நிறைய சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வது மொத்த கலோரிகளில் 5-10 சதவிகிதம் பரிந்துரைக்கப்படுகிறது. உண்ணத் தயாராக இருக்கும் உணவுகள், நூடுல்ஸ், சீஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ் மற்றும் கலவைகள் போன்ற உப்பு நிறைந்த தின்பண்டங்கள், பன்றி இறைச்சி, ஹாம், சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது ஊறுகாய், ஜாம், ஜெல்லி, சாஸ்கள் போன்ற பாதுகாப்பு நிறைந்த உணவுகள் மூலம் உப்பு உணவில் சேரலாம்.
இதேபோல், சர்க்கரை இல்லாத, கிரேவிகள், சோடாக்கள், பழச்சாறுகள், மிட்டாய்கள், சர்க்கரை தின்பண்டங்கள் போன்றவற்றில் இலவச சர்க்கரையை சேர்க்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் ஷிவானி பைஜால் விளக்கினார்.

அதிக உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்:

  • சாப்பாட்டு மேசையில் டேபிள் சால்ட் ஷேக்கர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உணவு பொருட்களை வாங்கும் முன் உணவு லேபிள்களைப் பாருங்கள், அதில் உள்ள பொருட்களைப் படித்து பகுப்பாய்வு செய்யுங்கள்.
  • உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • ரெடிமெட் உணவுகளை விட வீட்டில் சமைத்த உணவுகளை விரும்புங்கள்.
  • உங்கள் உணவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு நிறைந்த உணவுகளை அளவாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • கூடுதலான சர்க்கரையால் எந்த நன்மையும் இல்லை, எனவே பானங்கள் மற்றும் பிற உணவுகளில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சர்க்கரை அதிகம் சாப்பிட வேண்டும் என்றால், முழு பழங்களையும் சாப்பிட விரும்புங்கள்.
  • சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக கொட்டைகள், திராட்சை, அத்திப்பழம், முனக்கா, ஆர்கானிக் வெல்லம், தேன், தேங்காய்ச் சர்க்கரை போன்ற ஆரோக்கியமான மாற்று இனிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
  • சர்க்கரையைத் தவிர்க்க, சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடுங்கள்.

உலக சுகாதார நிறுவனம் உப்பு மற்றும் சர்க்கரை பரிந்துரைகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் உட்பட அனைத்து நபர்களுக்கும் வெளியிட்டுள்ளது. ஆனால், பெண்கள் கர்ப்ப காலத்தில், GDM (கர்ப்பகால நீரிழிவு) அல்லது PIH (கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம்) போன்ற அதிக ஆபத்துள்ள பிரச்னை இருந்தால், உப்பு, சர்க்கரை அளவின் தேவைகள் மாறுபடும். சர்க்கரையின் குறைவாக நீரிழிவு நோயை ஏற்படுத்தாது என்பதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். டையூரிடிக்ஸ் அல்லது ஸ்டெராய்டுகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்ற நிலைமைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“எனவே, உங்கள் உணவில் இருந்து உப்பு மற்றும் சர்க்கரையை முற்றிலுமாக நீக்குவதற்குப் பதிலாக, தேவையான அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் அதைச் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் பெரிய உணவு மாற்றங்களைச் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு நல்ல ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவியல் நிபுணரை பார்த்து ஆலோசனை பெற்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஊட்டச்சத்து நிபுணர் ஷிவானி பைஜால் பரிந்துரைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.