சென்னை:
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் (ESIC)அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது ஓர் மருத்துவராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மருத்துவமனையும் சுமார் 5 ஏக்கரில் 155 கோடியில் அதி நவீன வசதிகளுடன் 100 படுக்கைகளுடன் அமைய உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி போன்ற தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையிலேயே அதி நவீன வசதிகளுடன் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது தொழிற்சாலைகளில் ஏற்படும் எதிர்பாரா விபத்து நேரத்தில் அவசரகால சிகிச்சைக்கு தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
தமிழகத்திற்கு 8 தொழிலாளர்கள் நல மருத்துவமனைகள் (ESIC)அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவுக்கும் எனது வாழ்த்துக்களும்.. நன்றிகளும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.