WhatsApp: இந்த ஐபோன்களுக்கு இனி வாட்ஸ்அப் கிடையாது?

வாட்ஸ்அப்
இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற எண்ணம் பெரும்பான்மையாக மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இந்த நேரத்தில் சில ஆப்பிள்
ஐபோன்
மொபைல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வெளியிட்டுள்ளது.

அதாவது
iOS 11
இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் அக்டோபர் 24 ஆம் தேதி, இதன் காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!

வாட்ஸ்அப் நிறுத்தப்படும் போன்கள்

இதற்குப் பிறகு, இந்த இயங்குதளங்கள் இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. குறிப்பாக, ஐபோன் 5 (
iPhone 5
), ஐபோன் 5சி (iPhone 5C) ஆகிய மாடல்களுக்கு இதுவரை ஐஓஎஸ் 12 (iOS 12) இயங்குதளப் பதிப்பு கொடுக்கப்படவில்லை.

Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

எனவே, இதில் இந்த மாடல் ஐபோன்கள் சிக்கிக் கொள்ளும். முக்கியமாக 2012ஆம் ஆண்டின் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்றளவும் பெருவாரியான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5G In India: வெளியானது 5ஜி அறிவிப்பு – செப்டம்பர் முதல் சேவை தொடங்கும்!

ஏன் இந்த முடிவு

வாட்ஸ்அப் தனது தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்கள் வசதிக்காக பல சேவைகளை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல், பாதுகாப்புக்காக பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன.

Infinix Note 12 Series: அமோலெட் டிஸ்ப்ளே; ஸ்மார்ட் அம்சங்கள் என வெளியான இன்பினிக்ஸ் பட்ஜெட் போன்!

பழைய இயங்குதளங்களுக்கு ஒன்றியதாக வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டுகள் இருக்காது. ஏனென்றால், பழைய பதிப்புகளுக்கு ஈடாக புதிய கால தொழில்நுட்பங்களை நிறுவ முடியாது.

Call Recording: உங்கள் அழைப்பு ரகசியமாக பதிவுசெய்யப்படலாம் – எப்படி கண்டுபிடிப்பது?

வாட்ஸ்அப் அப்டேட்

சமீபத்தில் நிறுவனம் பல அம்சங்களை வாட்ஸ்அப் செயலி மற்றும் தளத்தில் சேர்த்தது. அதில் முக்கியமாக இன்ஸ்டாகிராம் மெசேஜுகளுக்கு இன்ஸ்டண்ட் ரிப்ளே கொடுப்பது போன்ற எமோஜிகளை, வாட்ஸ்அப் அரட்டை பக்கங்களிலும் நிறுவியது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

அதுமட்டுமில்லாமல், குழுக்களில் 512 உறுப்பினர்கள் வரை சேர்க்கவும், குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவற்றை விட்டு வெளியேறவும், குழுக்களில் 2ஜிபி வரை கோப்புகளை அனுப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.