கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை சுமார் 1500 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இச்சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 152 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 101 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக .பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.