ரயில் அட்டவணையில் மாற்றம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு : ஜூன் 1 முதல் சில ரயில்களின் வேகம் அதிகரிப்பதுடன், நேர அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:ஜூன் 1ல், பெங்களூரு — கார்வார் இடையே, தினமும் இயங்கும் 16595 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 6:40 மணிக்கு பதில், 6:50 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்படும்.கார்வார் – பெங்களூரு இடையிலான, 16596 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில், காலை 8:00 மணிக்கு பதில், 7:15 மணிக்கு, பெங்களூரை அடையும். ஹாசன் — கார்வார் ரயில் நேரத்தில், எந்த மாற்றமும் இல்லை.

பெங்களூரு – கண்ணுார் இடையே, தினமும் இயங்கும் 16511 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 9:30 மணிக்கு பதில், 9:35 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்படும்.கண்ணுார் – – பெங்களூரு இடையிலான, 16512 எண் கொண்ட ரயில், காலை 6:30 மணிக்கு பதில், 6:15 மணிக்கு பெங்களூரை அடையும். ஹாசன் — கண்ணுார் இடையிலான அட்டவணையில், எந்த மாற்றமும் இருக்காது.மீரஜ் — பெங்களூரு இடையே, தினமும் இயங்கும் 16590 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில், காலை 6:30 மணிக்கு பதில், 6:15க்கு வந்தடையும். மீரஜ் — யஷ்வந்த்பூர் இடையிலான அட்டவணையில் மாற்றமில்லை.விஜயபுரா — மங்களூரு ஜங்ஷன் இடையே, தினமும் இயங்கும் 07377 எண்ணுள்ள எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 6:15 மணிக்கு பதில், 6:35 மணிக்கு விஜயபுராவிலிருந்து புறப்பட்டு, பசவனபாகேவாடி சாலை, அலமாட்டி, பாகல்கோட், ஹூப்பள்ளி வழியாக மங்களூரை அடையும். கர்ஜகி — மங்களூரு இடையிலான அட்டவணையில் மாற்றம் இருக்காது.அரசிகரே — ஹூப்பள்ளி இடையே, தினமும் இயங்கும் 07367 எண் கொண்ட பாசஞ்சர் ரயில், அரிசிகரேவிலிருந்து, காலை 5:10 மணிக்கு பதில், 5:30க்கு புறப்பட்டு, பானாவரா, கடூர், பிரூர், தாவணகரே ஹரிஹரா, ராணி பென்னுார், சவனுார் வழியாக மதியம் 12:15 மணிக்கு ஹூப்பள்ளியை அடையும்.ஜூன் 4ல் இருந்து, ஹூப்பள்ளி — யஷ்வந்த்பூர் இடையே, வாரந்தோறும் இயங்கும், 16544 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில், ஹூப்பள்ளியிலிருந்து, காலை 11:20க்கு பதில், 11:30க்கு புறப்படும்.ஜூன் 1ல் இருந்து, ஹஜரத் நிஜாமுதீன் — யஷ்வந்த்பூர் இடையே, வாரம் இரண்டு முறை இயங்கும், 12630 எண் கொண்ட அதிவிரைவு ரயில், காலை 6:05 மணிக்கு பதில், 5:45க்கு யஷ்வந்த்பூரை அடையும். இப்பாதை இடையிலான, மற்ற ரயில் நிலையங்களில் எந்த மாற்றமும் இல்லை.ஜூன் 2ல், யஷ்வந்த்பூர் — ஹஜரத் நிஜாமுதீன் இடையிலான, 12629 எண் கொண்ட ரயில், யஷ்வந்த்பூரிலிருந்து, மதியம் 1:55க்கு பதில், 2:30க்கு புறப்பட்டு, துமகூரு, அரிசிகரே, தாவணகரே, ஹாவேரி வழியாக நிஜாமுதீனை அடையும்.மே 31ல், சண்டிகர் — யஷ்வந்த்பூர் இடையே, வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும், 22696 எண் கொண்ட ரயில், காலை 6:05 மணிக்கு பதில், 5:45க்கு யஷ்வந்த்பூரை அடையும். ஜூன் 1ல், யஷ்வந்த்பூர் -சண்டிகர் இடையிலான ரயில், மதியம் 1:55 மணிக்கு பதில், 2:30 மணிக்கு யஷ்வந்த்பூரிலிருந்து புறப்பட்டு, துமகூரு, அரசிகரே, தாவணகரே வழியாக, சண்டிகரை அடையும்.ஜூன் 3ல், பண்டரபுரா — யஷ்வந்த்பூர் இடையிலான, வீக்லி எக்ஸ்பிரஸ் யஷ்வந்த்பூரிலிருந்து, காலை 6:05 மணிக்கு பதில், 5:45க்கு புறப்படும். அதே போன்று சில ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.