தனியாக இருந்த பெண்ணை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் 43வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்த அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். அவரின் வீட்டில் வெளியே மர்ம நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அவரிடம் அந்த பெண் யார் என்று கேட்டதற்கு அந்த மர்ம நபர் கத்தியை காட்டி வீட்டிற்குள் நுழைந்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துவிட்டு அவரின் செல்போனை எண்ணை பெற்று கொண்டு தப்பி சென்றார்.
செல்போனில் இருந்த பெண்ணை தொடர்பு கொண்ட அவர் காவல்நிலையத்தில் இதுபற்றி தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது மகளிடம் கூறியுள்ள அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் .
அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரித்து அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் என்பதும் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பதும் தெரியவந்தது இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.