பீஜிங்-பாக்., வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, நேற்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
நம் அண்டை நாடான பாக்.,ல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், வெளியுறவு துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி நியமிக்கப்பட்டார். இவர், முன்னாள் பிரதமர் மறைந்த பெனசிர் புட்டோவின் மகன். இந்நிலையில் பிலாவல் புட்டோ, நேற்று சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
குவாங்ஸோ நகரில் நடந்த இந்த சந்திப்பில் முந்தைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் மோசமடைந்த சீனா – பாக்., நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக பேசியதாக பிலாவல் தெரிவித்துள்ளார். சீன பயணம் குறித்து பிலாவல் கூறியதாவது:பாக்., – சீனா இடையிலான துாதரக உறவின் 71வது ஆண்டில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்., – சீனா இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.திருத்தப்பட்ட செய்தி
Advertisement