கீரனூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள செப்லாதோப்பை சேர்ந்த பாலமுருகன் (21) என்பவர் அதை கிராமத்தில் வசிக்கும் குமார் (40) மற்றும் அவரது மகன் கார்த்திக் (16) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் கீரனூர் அருகே ஓடுக்கூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு அவர்கள் மின்விசிறி பொருத்தும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கீரனூர் அருகே களமாவூர் மேம்பாலத்தில் வந்தபோது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற குமார், பாலமுருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த குமாரின் மகன் கார்த்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/154078.webp.webp.webp)