தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சாஹல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில், விராட்கோலி, கே.எல்.ராகுல், சுப்மான் கில், புஜாரா, பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.