ஜமைக்காவில் கூண்டில் இருக்கும் சிங்கத்தை வெறுப்பேற்றி விளையாடிய நபர் தனது விரலை இழந்துவிட்டார்.
ஜமைக்காவில் உள்ள மிருகக்காட்சிசாலையின் பணியாளர் ஒருவர், சாதாரணமாக பூனையுடன் விளையாடுவது போல் சிங்கத்தை தொட்டு, வெறுப்பேற்றியபடி விளையாடிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
முதலில் சில முறை சிங்கத்தினக்கடியில் இருந்து தப்பித்த அவர், இறுதியில் சிங்கத்தின் பற்களில் அவரது வலது கை விரல்கள் வசமாக மாட்டிக்கொண்டன. அவர் தனது கையை வெளியே எடுக்கும் முயற்சியில் இழுக்கத்தொடங்கினார்.
பள்ளி சீருடையில் பழங்குடியின சிறுமியை உதைத்து தாக்கிய சிறுவன்! வீடியோ வைரலானதால் முதல்வர் நடவடிக்கை
அவர் வேகமாக இழுக்க, சிங்கமும் மறுபுறம் இறுக்கமாக கடித்து இழுத்தது. ஒருவழியாக அந்த அனைவர் சிங்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். ஆனால், அவர் தனது வலதுகை மோதிர விரலை சிங்கத்தின் கோபத்திற்கு இரையாக்கிக்கொண்டார், விறல் சிங்கத்தின் வாயோடு தனியாக கிழிந்து சென்றது.
சம்பவத்தை நேரில் கண்ட பெண் பார்வையாளர் ஒருவர், “இது நடந்தபோது, இது ஒரு நகைச்சுவை என்று நான் நினைத்தேன், அதன் தீவிரத்தை நான் உணரவில்லை.
லண்டன் போக்குவரத்து டிப்போவில் பயங்கர வெடிவிபத்து: தீப்பிடித்து எரிந்த பேருந்துகள்
அவர் தரையில் விழுந்தபோதுதான் அது தீவிரமானது என்பதை அனைவரும் உணர்ந்தனர். எல்லோரும் பீதியடைய ஆரம்பித்தார்கள். அவரது விரல் முழுவதும் தோலும் இல்லாமல் போய்விட்டது” என்றார்.
பின்னர் அந்த பணியாளர் ஒரு வாகனத்தில் ஏறிச்சென்றதாகவும், தனது வலியை காண்பிக்காமல் அங்கிருந்து வெளியேறியதாகவும், பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.