சென்னையில் பெட்ரோல் ரூ.8.22, டீசல் ரூ.6.70 குறைந்தது

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை குறைந்தது. சுமார் 45 நாள்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ8.22 குறைந்து ரூ102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.6.70 குறைந்து ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

மேலும், மத்திய அரசு வரியை குறைக்க அறிவுறுத்திய நிலையில், இதுவரை கேரளா மற்றும் ராஜாஸ்தான் அரசுகள் வரியை குறைந்துள்ளன.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ272 அதிகரித்து, ரூ42 ஆயிரத்து 40 க்கு விற்பனையாகிறது. நேற்று 41 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ34 அதிகரித்து ரூ5221க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை சவரனுக்கு ரூ527.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ65.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை விலையுடன் ஒப்பிடுகையில், மாற்றம் ஏற்படவில்லை.

மிதமான மழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று(மே.22) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸூம், குறைந்தப்பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்

நீர்மட்டம்: 116.67 அடி
நீர்வரத்து: 25161 கன அடி
நீர் வெளியேற்றம்: 1500 கன அடி
நீர் இருப்பு: 88.25 டிஎம்சி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.