சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனவிலங்குகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவுப்பண்டங்களை வழங்கினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் பள்ளி கோடை விடுமுறை காரணமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்படி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவு பண்டங்களை வழங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக வன விலங்குகள் உடல் உபாதைக்கு உள்ளாகி, நோய்வாய்படுகின்றது. எனவே குரங்குகளுக்கு எண்ணெயில் பொரித்த இறைச்சி உள்ளிட்ட உணவுகளை தரக்கூடாது என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீறி வனவிலங்குகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை வழங்கினால், அந்த சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.