Tamil Nadu News Updates: சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். விபத்தில்லா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு காவல் துறை வேண்டுகோள்
இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. நேற்றை விலையிலேயே விற்பனை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் நிறைவு
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிறைவு பெற்றது. மே 12 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நேற்று தருமபுர ஆதீனம் நாற்காலி பல்லக்கில் உலா வந்தார். பட்டணப் பிரவேச பல்லக்கு வீதியுலா நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்து முடிவடைந்தது.
ஆஸி. புதிய பிரதமராக அந்தோணி ஆல்பனீஸ் பதவியேற்பு
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் 31 ஆவது பிரதமராக கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
ஐபிஎல்: பஞ்சாப் அணி வெற்றி
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கையில் அதிபருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும் சட்டப்பிரிவை செல்லாதது ஆக்கும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு இன்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது
டெல்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால், விமான சேவை பாதிப்பு
குவாட் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் டோக்கியோ நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் குவாட் அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன.