டி. ஆர். டி. ஓ. அமைப்பின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்: இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடு அம்பலம்

டெல்லி: இருசக்கர வாகனம் விற்பையில் இ-ஸ்கூட்டர்களின் பங்கை 2 சதவிதத்தில் இருந்து 80 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது ஓன்றிய அரசின் நோக்கம், ஆனால் புதிதாக  வாங்கப்பட்ட  இ-ஸ்கூட்டர்கள் பலவும் அங்கங்கே திப்பிடித்து எரிந்து உயிர்களையும் காவுவாங்கியது ஓன்றிய அரசின் நோக்கம் நிறைவேற பெறும் இடையூறாக அமைத்தது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சங்கம் கேட்டுக்கொண்டது. அதன்படி டி. ஆர். டி. ஓ. நடத்திய ஆய்வில் இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இ-ஸ்கூஸ்ட்டர்கல் சரிவர பரிசோதிக்கப்படமல் அவசர கதியில் விற்பனை சந்தைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காரணமாக இருக்கலாம் என்றும் டி. ஆர். டி. ஓ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செலவினத்தை குறைக்க இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேன்டுமென்றே தரமற்ற பொருட்களை பயன்படுத்தி இருப்பதாகவும் டி. ஆர். டி. ஓ. உறுதிப்பற்றி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.