ராஜஸ்தான் மாநிலம் ஜான்வர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு 3 ஆண்டுகளில் தனது கொழுந்தியாரை கொலை செய்த குற்றத்துக்காக ஜோத்பூர் நகரின் மாண்டோரில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜான்வர் பகுதியில் தனது பெற்றோரிடம் வளரும் தன் குழந்தையைப் பார்ப்பதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பியதாக சொல்லப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/628b12b1481f8.webp.jpeg)
ஜோத்பூரில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் செல்ல சாலையில் காத்திருந்த போது குல்தீப் பிஷ்னோய் (23) எனும் மாணவன் அந்த பெண் பேருந்து நிலையத்துக்குச் செல்ல உதவுவதாகக் கூறி தனது வாகனத்தில் லிஃப்ட் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த பகுதியிலிருந்த பாலத்துக்கு அருகில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுள்ளார். அந்த பாலத்துக்கு அருகில் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற அந்த பெண்ணுக்கு உதவுவதாக ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) என்பவர் அந்த பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். அவர் அந்த பெண்ணை கைலானா ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/628b12b520680.webp.jpeg)
இறுதியாக வீட்டுக்கு வந்த அந்த பெண் தனக்கு நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் மாண்டோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக மாண்டோர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மணீஷ் தேவ் , “லிஃப்ட கொடுப்பதாக கூறி இரண்டு நபர்களால் ஒரே இரவில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் பிஷ்னோய் (23) எனும் மாணவர், ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.