தமிழ்நாட்டில் கோடை காலம் என்றால் மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் பெரும் அளவில் நம்பி இருப்பது நிலக்கரி உள்ளிட்ட படிம எரிசக்தி நிலையங்களைச் சார்ந்து இருப்பது என கூறுகின்றனர்.
காற்றாலை, சூரிய மின் சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தினால் தான் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியில் உலக நாடுகளுடன் போட்டி போடுவதாகத் தெரிவித்துள்ளது. அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக முதலீடு.. LML-ன் பிரம்மாண்ட திட்டம்..!
சீனா
காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா 342 ஜிகாவாட் கொள்ளளவுடன் முதலிடத்தில் உள்ளது. உலகின் கால் பகுதி காற்றாலை மின்சாரம் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 2015-ம் ஆண்டு சீனாவின் மொத்த மின் உற்பத்தியை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
சீனாவின் கன்சு மாகாணத்தில் 10 ஜிகாவாட் உச்ச திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கடலோர காற்றாலையும் உள்ளது. தென் கொரியா 8.2 ஜிகாவாட் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கடல் காற்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா
சீனாவின் மொத்த காற்றாலை மின்சார உற்பத்தியுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் 139 ஜிகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியா, சீனா போன்று அமெரிக்காவும் நிலக்கரி மற்றும் டீசல் மூலம் மின்சாரத்தை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் 30 ஜிகாவாட் மின்சாரத்தைக் கடலோர காற்றாலை மூலம் உற்பத்தி செய்ய ஜோ பிடன் தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது அமெரிக்காவின் 10 மில்லியன் வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான மின்சாரத்தை அளிக்கும்.
ஜெர்மனி
அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் ஜெர்மனி 60 ஜிகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி செய்கிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியில் நம்பர் 1 நாடாக ஜெர்மனி உள்ளது. எனவே இங்கு அதிகளவில் மின்சாரம் தேவையும் உள்ளது. இங்கு காற்றாலை உற்பத்தியில் மட்டும் 10 லட்சம் நபர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்தியா
காற்றாலை மின்சார உற்பத்தியில் 42 ஜிகாவாட் கொள்ளளவுடன் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஆஸ்திரேலியா , மெக்சிகோ நாடுகளை விட அதிக அளவில் மின்சாரம் காற்றாலை உதவியுடன் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரிட்டன் & ஸ்பெயின்
கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. 2021-ம் ஆண்டு முதல் காற்றாலை மின் உற்பத்தில் வேகமாக வளரும் நாடாக ஸ்பெயின் உள்ளது.
உலக வெப்ப மயமாதல்
சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி இப்போது உள்ளது போல ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்து வந்தால் உலக வெப்ப மயமாதலை 1.5 டிகிரி செல்சியசாக குறைக்கலாம் என கூறுகின்றனர்.
Tamil Nadu To Become Worlds Wind Power Superpowers
The State of Tamil Nadu Has More Wind Capacity Then Australia or Mexico: World Economic Forum | காற்றாலை மின்சார உற்பத்தியில் உலக நாடுகளுடன் போட்டி போடும் தமிழ்நாடு!